ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவை, கெர்க்கஸ்வோல்ட் இல 02 தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் நாளை 25ஆம திகதிதியும் மறுதினம் 26ஆம் திகதியும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று வித்தியாலயத்தின் அதிபர் இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதற்கமைவாக, நாளை 25ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு பாடசாலையின் நுழைவாயில் இருந்து அனைத்து அணியினரும் பேண்ட் வாத்தியத்தோடு மைதானத்திற்கு அழைத்து செலல்லப்பட்டு, மைதானத்தில் தேசிய கொடி. மாகாணகொடி, பழையமாணவர் ஒன்றியத்தின் கொடி மற்றும் 16 அணியினரின் கொடிகளும் ஏற்றிவைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக போட்டி ஆரம்பிக்கப்பட உள்ளது.
நாளையதினம் காலை 11மணியளவில் புலமைப்பரீசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் சித்தியெய்திய மாணவர்கள் அதேபோல் க.பொ.சா.தர பரீட்சைக்கு சித்தியெய்திய அனைத்து மாணவர்களும் பதக்கம் வழங்கி கௌரவிக்கபட உள்ளதோடு பாடசாலைக்கான அன்பளிப்பு நிகழ்வும் இடம் பெறஉள்ளது..
26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் வெற்றி பெரும் முதலாம், இரண்டாம, .மூன்றாம் இடங்களை பெற்ற அணியினருக்கு வெற்றிகேடயங்கள் வழங்கி வைக்கப்பட உள்ளதோடு முன்னாள் அதிபர் ஏ.அருளாந்தம், தற்போதைய புதிய அதிபர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் கௌரவிக்கப்பட உள்ளனர்.
இந்நிகழ்வில் ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் திருமதி ஆர்.ஏ.சத்தியேந்திரா, பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சாந்தபண்டார, தோட்ட முகாமையாளர் நிலான் லியனகே மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எஸ் சதீஸ்