சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் அபிவிருத்தி நிர்மான மற்றும் இயந்திர உபகரண அதிகார சபையின் கேகாலை கிளை மற்றும் சேவை நிலையம் என்பன சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தமைமையில் கேகாலை மொலகொட பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் அபிவிருத்தி நிர்மான மற்றும் இயந்திர உபகரண அதிகார சபை 2011ஆம் ஆண்டு சப்ரகமுவ மாகாண பிரதான அமைச்சின் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பிரதான அலுவலகம் மற்றும் சேவை நிலையம் என்பன இரத்தினபுரி குருவிட்ட பிரதேசத்தில் அமைத்துள்ளது.
சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் அபிவிருத்தி நிர்மான மற்றும் இயந்திர உபகரண அதிகார சபையின் மூலம் சப்ரகமுவ மாகாணதில் வைத்தியசாலை, பாடசாலை உட்பட அரச மற்றும் தனியார் கட்டிடத்தொகுதிகளை அமைத்தல் மற்றும் பழைய கட்டிடங்களை திருத்தி அமைத்தல், வாகனங்களை பழுது பார்தல் மற்றம் வாகன சேர்விஸ், அச்சகம் உட்பட பல சேவைகளை செய்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் அபிவிருத்தி நிர்மான மற்றும் இயந்திர உபகரண அதிகார சபையின் தலைவர் அநுர அலகியவன்ன, சப்ரகமுவ மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் பிரபாத் உதாகர, சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் அபிவிருத்தி நிர்மான மற்றும் இயந்திர உபகரண அதிகார சபையின் பணிப்பாளர் லலித் பம்பரபோட்டவ உட்பட அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.
சிவா ஸ்ரீதரராவ் –