சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 26,000 ஆக அதிகரித்துள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
அண்மையில் போதைப்பொருள் தொடர்பிலான சட்டம் கடுமையாக்கப்பட்டதை அடுத்து, அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நாளாந்தம் கைது செய்யப்படுவதால், விளக்கமறியலில் வைக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் சட்டம் திருத்தப்பட்டதை அடுத்து, ஐஸ் போதைப்பொருள் பாவனை தொடர்பான சட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இதற்கிணங்க, ஐஸ் போதைபொருளுக்கு அடிமையான சுமார் 400 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.