கொடியேற்றத்துடன் ஆரம்பமானது நல்லூர் மகோற்சவப் பெருவிழா

0
193

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

இதன்படி, சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது.

யாழ.; சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய தேரில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.
ஓகஸ்ட் 18ஆம் திகதி மஞ்சமும், 31ஆம் திகதி சப்பரமும், செப்டம்பர் முதலாம் திகதி தேர்த் திருவிழாவும் இடம்பெறும்.

தொடர்ந்து செப்டம்பர் இரண்டாம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.

செப்டம்பர் மூன்றாம் திகதி பூங்காவனமும் செப்டம்பர் நான்காம் திகதி வைரவர் உற்சவத்துடனும் மஹோற்சவம் நிறைவுக்கு வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here