கொட்டகலை கேம்பிரீஜ் தேசிய கல்லூரிக்கு பஸ்வண்டியொன்று இன்று வழங்கி வைக்கப்பட்டது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கைக்கு அமைய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் கொட்டகலை கேம்பிரிட்ஜ் தேசிய கல்லூரிக்கு பஸ்வண்டியொன்று வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் பிரமாணடமாக இடம்பெற்றது.
இதன் போது கொட்டகலை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட வாழிபாட்டில் ஈடுபட்ட எதிர்கட்சி தலைவர் பஸ்ஸின்; ஊடாடக கேம்பிரிட்ஜ் தேசிய கல்லூரிக்கு வருகை தந்த சஜீத் பிரேமதாசவிற்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் , மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் , பிரதேசசபை உறுப்பினர்கள் , அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பொகவந்தலாவை சதீஸ்