கொட்டகலை மாணவனுக்கு கொழும்பில் பரீட்சை எழுத அனுமதி!

0
334

இன்று நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு கொட்டகலை த.ம.வி இல் தோற்ற இருந்த மாணவரொருவருக்கு பரீட்சை எழுதுவதற்கு கொழும்பு இசிபத்தானா கல்லூரியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கொட்டக்கலையில் கல்வி கற்கும் மாணவரொருவர் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று முன் தினம் கொழும்பு ஆதார வைத்தியசாலைபில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சுகயீனம் உற்ற நிலையில் பரீட்சைக்காக நேற்று வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் நாளை மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியசாலை நிர்வாகம் பணித்துள்ளது.

இவ்வாறான நிலையில், இன்று இடம்பெறும் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் இம்மாணவனுக்கு மீண்டும் கொழும்பிலிருந்து கொட்டகலைக்கு பிரயாணத்தை மேற்கொண்டு பரீட்சை எழுதுவதற்கு பொருத்தமான சூழ்நிலை நிலை காணப்படாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, குறித்த மாணவர் தொடர்பில் வகுப்பாசிரியர் மற்றும் மாணவனின் தாய் ஆகியோர் நுவரெலியா கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்விக்குப் பொறுப்பான கலவிப் பணிப்பாளர் தேசபந்து எஸ்.செல்வராஜாவிடம் விடயத்தை கூறியுள்ளனர்.

அவர் உடனடியாக பரீட்சைத் திணைக்கள பரீட்சை ஆணையாளர் திருமதி ஜீவராணி புனிதா அம்மையாருடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு கேட்டுக்கொண்டதற்கும் தேவையான சகல ஆவணங்களும் அவருக்கு புலணம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதற்கும் அமைவாக பரீட்சை ஆணையாளர் திருமதி.ஜீவராணி புனிதா அம்மையார் குறித்த மாணவன் இன்றைய தினம் தற்காலிகமாக வசிக்கும் தமது உறவினர் வீட்டுக்கு அருகிலுள்ள கொழும்பு இசிப்பத்தான வித்தியாலயத்தில் பரீட்சை எழுதுவதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

– ரா.கவிஷான் –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here