கொரோனா பாதிப்பு 60 கோடியை கடந்துள்ளது

0
266

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 கோடியை கடந்துள்ளது. அத்துடன், கொரோனா மரணங்களும் 64 இலட்சத்து 70 ஆயி ரத்தை கடந்து உயர்ந்துள்ளன.

நேற்று காலை 6 மணி வரையான 24 மணி நேரத்தில் 5 இலட்சத்து 46 ஆயிரத்து 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், தொற்றாளர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 60 கோடியே 3 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பாதிக்கப் பட்டவர்களின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 9 கோடியே 53 இலட்சத்து 24 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here