முச்சக்கர வண்டி மற்றும் கடை ஒன்றின் மீது கார் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று இன்று கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.
வாகனத்தில் இருந்தவர்கள் இரவு விடுதி ஒன்றில் விருந்து வைத்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் முச்சக்கரவண்டி மீதும் பின்னர் கடை ஒன்றின் மீதும் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
https://youtu.be/lmphyQmamNY
காரில் இருந்த 2 பெண்கள் காயம் அடைந்த நிலையில் வாகனத்தின் சாரதி அங்கிருந்து தப்பியோடியதாக தெரியவருவதுடன் இது தொடர்பான விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.