கொழும்பில் நாளாந்தம் 350 மெட்ரிக் தொன் உணவு வீணடிப்பு

0
258

கொழும்பில் நாளாந்தம் 350 மெட்ரிக் தொன் உணவு வீணடிக்கப்படுவதாக தெரிவித்துள்ள கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க இன்னும் மூன்று மாதங்களில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

உணவு கையிருப்பு செப்டம்பர் மாதம் வரை மட்டுமே இருக்கும கொழும்பு மாநகர சபை  விரைவில் நகருக்குள் 600 ஏக்கர் நிலத்தில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை பயிரிடத் தொடங்கும் என்று தெரிவித்தார்.

நகரத்தில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை வளர்க்க ஊக்குவிக்கப்படும் அதே வேளையில் பயிர்களை வளர்ப்பதற்கான விவசாயத் திட்டத்தைத் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

கொழும்பு நகர சனத்தொகையில் குறைந்த வருமானம் பெறும் சுமார் 60 வீதமானவர்கள் உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்படுவார்கள். நான் யாரையும் அச்சுறுத்த விரும்பவில்லை, ஆனால் வரவிருக்கும் நெருக்கடியை மக்களுக்கு தெரிவிக்கவும், மக்களை தயார்படுத்தவும் விரும்புகிறேன்’ என்று அவர் கூறினார்.

இந்நிலையில், கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 3,000 ரூபா மதிப்பிலான நிவாரணம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here