கொழும்பில் உள்ள நிதியமைச்சு மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்ததையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலக நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் ‘கோட்டகோகம’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் மேலும் இரண்டு நுழைவாயில்களை மறித்ததன் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Video Player
00:00
00:00