கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் வளி மாசு அதிகரிப்பு

0
238

கொழும்பு நகர் உள்ளிட்ட பிரதான நகரங்கள் சிலவற்றில் வளி மாசடைதல் மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, நாட்டின் பல பிரதேசங்களில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு 150 முதல் 200 புள்ளிகளாக காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலையும் இதற்கு காரணம் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் வளி மாசுபாடு முகாமைத்துவ பிரிவின் தலைமை ஆய்வாளர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டார்.

வளி மாசடைதல், சுவாச நோய்களினால் பாதிக்கப்பட் டுள்ளவர்களுக்கு மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வீடுகளிலிருந்து வெளியே செல்லும் சந்தர்ப்பங்களில் முகக்கவசத்தை அணிவதன் மூலம் நச்சு வாயு பாதிப்பை தவிர்த்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here