கொழும்பு காலிமுகத் திடல் ‘கோட்டா கோ கம’வில் இன்று அதிகாலை பாரியளவில் இராணுவம், அதிரடிப்படை குவிக்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நள்ளிரவைத் தாண்டியதும் படையினரின் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.
போராட்டக்காரர்களும் சில பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் அப்பகுதிகள் கொண்டுவவரப்பட்டுள்ளதாகவும் இதன்போது ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.
காலி முகத்திற்க்கான அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டிருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.