பாணந்துறையில் இருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற குறித்த கார் கினிகத்தேன தியகல பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதன் போது இந்தக் கார் ஒன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன். இது தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது காரில் ஐவர் பயணித்துள்ளதாகவும் அவர்கள் காரில் இருந்து இறங்கிய போது தீவிபத்து ஏற்பட்டதாகவும் ஒருவருக்கு மட்டும் சிறு தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது.
கொழும்பு – ஹட்டன் வீதியின் கினிகத்தேன தியகல பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் அந்த வீதியில் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.