கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருவிழா எதிர்வரும் 13ஆம் திகதி சிறப்பாக கொண்டாடப்பட வுள்ளது. கடந்த 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட திருப்பலியைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்கு நவநாள் ஆராதனைகள் நடைபெறவுள்ளன.
அதனையடுத்து எதிர்வரும் 12ஆம் திகதி மாலை 7.00 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் வெஸ்பர்ஸ் ஆராதனை நடைபெற வுள்ளது.
13ஆம் திகதி காலை 8.00 மணிக்கு திருவிழா திருப்பலி மறை மாவட்ட துணை ஆயர் பேரருட்திரு அன்டன் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.
அன்றைய தினம் காலை 6.00 மணிக்கு அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் அடிகளாரினால் தமிழில் திருப்பலிப் பூசை நிறைவேற்றப்படவுள்ளது. அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி இடம்பெறவுள்ளது. அதனையடுத்து இரவு 8.00மணியளவில் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர்வாதம் பேராயரினால் வழங்கப்பட வுள்ளது.