சிங்கப்பூரில் தற்போது தஞ்சமடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கான விசா நாளைய தினம் 11 ஆம் திகதி காலாவதியாகும் நிலையில் அவருக்கு மேலும் சில வாரங்களுக்கு விசா நீடிப்பை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டிருக்கின்றது.
இவ்விடயத்தில் ஜனாதிபதி ரணில் விககிரமசிங்கவும் நேரடியாகத் தலையிட்டிருப்பதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையையடுத்து கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் முழுமையான பாதுகாப்புடன் தங்குமிட வசதிகளை ஏற்கனவே வழங்கியிருப்பதாக அரசாங்க வடட்டாரங்கள் தெரிவித்தன. ஆடம்பர ஹொட்டல் ஒன்றில் அவர் தங்கியிருப்பதாக சமூக ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களையும் இந்த வட்டாரங்கள் மறுத்துள்ளன.