கோட்டாவிற்கு எவ்வித சலுகையும் இல்லை – சிங்கபூர்

0
353

முன்னாள்    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு சிங்கப்பூரில் எந்தவித சலுகையும், விலக்குரிமையும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே விவியன் பாலகிருஷ்ணன் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிங்கப்பூர் அரசாங்கம் பொதுவாக முன்னாள் அரச தலைவர்கள் அல்லது நாட்டுத் தலைவர்களுக்கு சலுகைகள், விலக்கு அல்லது விருந்தோம்பல் வழங்குவதில்லை என்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here