முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடு திரும்பிய பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் என்று அவரது கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள வார ஏடு ஒன்றின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த போது, கட்சியில் உயர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், கோட்டாபய எந்த பதவியையும் ஏற்கவில்லை.
ஆனால், இம்முறை அவர் இலங்கை வந்த பின்னர் கட்சியின் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் அவரை ஈடுபடுத்தும் வகையில் அவருக்கு கட்சியில் சிறப்பு பதவி வழங்கப்படும் என்று பொதுஜன பெரமுன கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.