முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு இது பொருத்தமான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறிள்ளார்.
வோல் ஸ் ரீட் ஜேர்னல் சஞ்சிகைக்கு அளிததுள்ள செவ்வியில் ஜனாதிபதி ரணில் இவ்வாறு கூறியுள்ளார்.
‘அவர் நாடு திரும்புவதற்கான தருணம் இது என நான் நம்பவில்லை. அவர் விரைவில் நாடு திரும்புவதற்கான அறிகுறியையும் நான் காணவில்லை’ எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 13 ஆம் திகதி இலங்கையிலிந்து வெளியேறி மாலைதீவுக்குச் சென்றார். ஜூலை 14 ஆம் திகதி அவர் மாலைத்தீவிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றார்.
அவர் சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான குறுகிய கால விசா அனுமதியை ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரை சிங்கப்பூர் அரசாங்கம் நீடித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாடு திரும்புவார் என அமைச்சர் பந்துல குணவர்தன கடந்த வாரம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.