கோழிகளை திருடிவரும் 8 அடி நீள நீளமுடைய முதலை சிக்கியது

0
55

மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதேசத்தில்  உர்மனைக்குள் உட்புகுந்த சுமார் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை மக்கள் மடக்கி பிடித்து கட்டிவைத்துள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு 10.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

பிள்ளையாரடி நாகையா வீதியிலுள்ள பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இரவு வேளைகளில்  முதலை ஒன்று உட்புகுந்து அங்கு வளர்த்துவரும் கோழிகளை பிடித்து உண்டுவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த திருட்டு முதலையை பிடிப்பதற்காக வீட்டின் உரிமையாளர் முதலை உப்புகும் பகுதியில் சுருக்கு வைத்துள்ள நிலையில் முதலை சம்பவதினமான நேற்று இரவு சுருக்கில் மாட்டிக் கொண்டதையடுத்து பொதுமக்கள் அதனை மடக்கி பிடித்து கட்டிவைத்ததுடன் வனவிலங்கு திணைக்களம் பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.

(கனகராசா சரவணன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here