க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றிய மாணாக்கருக்கு கண்டியில் செயலமர்வுத் தொடர்

0
148

க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றிய மாணாக்கருக்கு வாழ்க்கை வழிகாட்டல் வழங்கும் செயலமர்வுத் தொடர் கண்டியில் ஆரம்பம்.

சமீபத்தில் முடிவடைந்த கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையில் தோற்றிய கண்டி மாவட்ட பெருந்தோட்டப் பாடசாலை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் செயலமர்வுகள் 26ஆம் திகதி ஆரம்பமானது.

26ஆம் திகதி தெல்தோட்டை மலைமகள் இந்துக் கல்லூரியிலூரியில் இடம்பெற்றது.

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கண்டி தமிழ் வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையோடு செயலமர்வுகள் நடைபெறவுள்ளன.

இந்த செயலமர்வுத் தொடர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை எழுதி விட்டு உயர் கல்வியைத் தொடர எதிர்பார்த்திருக்கும் பிள்ளைகளுக்கான வழிகாட்டலாக அமையும் என பிரதிக் கல்வி பணிப்பாளர் பெ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்தல், G.C.E உயர்தர வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்கள் தாம் கல்வி கற்க வேண்டிய துறைகளையும் பாடங்களையும் தெரிவு செய்வதற்குரிய தெளிவூட்டலை வழங்குதல், இலங்கையின் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள கற்கைநெறிகள் பற்றி விளக்கிக் கூறுதல், இந்தியா உள்ளிட்ட நாடுகள் வழங்கும் புலமைப்பரிசில்களை விபரித்தல், தொழில் சந்தையில் உள்ள வாய்ப்புக்களை எடுத்துரைத்தல் போன்ற நோக்கங்களோடு செயலமர்வு நடத்தப்படுகிறது.

கண்டி தமிழ் வர்த்தகர் சங்கத்தின் தலைவர்  குமாரதாஸ் கருத்து வெளியிடுகையில்,

பெருந்தோட்ட தமிழ் சமூகத்தின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், இந்த செயலமர்வு நடத்தப்படுவதாக தெரிவித்தார். சகலரும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயலமர்வுகள் இலவசமாக நடத்தப்படுவதாக அவர் கூறினார்.

இந்த செயலமர்வுத் தொடரின் முதலாவது நிகழ்ச்சி 2024ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை கண்டி விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்றது.

28ஆம் திகதி பன்வில விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயம், 30ஆம் திகதி கதிரேசன் மத்திய கல்லூரியிலும், முதலாம் திகதி ரஜவெல இந்து தேசிய கல்லூரியிலும் நடத்தப்படவுள்ளன.

புசல்லாவ சரஸ்வதி மத்திய வித்தியாலயம், தெல்தெனிய தேசிய பாடசாலை ஆகிய நிலையங்களிலும் செயலமர்வுகள் நடைபெறும். அந்தந்த நிலையங்களின் அயற்பாடசாலைகளைச சேர்ந்த மாணவர்கள் செயலமர்வுகளில் பங்கேற்பார்கள்.

இந்த நிகழ்ச்சிகளில் ஹற்றன் ஹைலன்ட்ஸ் கல்லூரியைச் சேர்ந்தவரும், அனுபவம் மிக்க உளவள ஆலோசகருமான ஆர்.மகேந்திரன் உள்ளிட்ட வளவாளர்கள் பங்கேற்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here