2022ஆம் ஆண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த க.பொ.தர சாதாரண பரீட்சை 2023 ஆம் ஆண்டு பிற்போடப்படுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
குறித்த பரீட்சையானது 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறும். சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நிலையங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்ப சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.