ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சங்கைக்குரிய அட்டமஸ்தானாதிபதி கண்டி பிரதம சங்கநாயக்க அதி. வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி, வரலாற்றுச் சிறப்புமிக்க அநுராதபுர புனிதஸ்தலத்திற்கு விஜயம் செய்து நாயக்க தேரரை சந்தித்து நலம் விசாரித்தார்.
ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்ட தேரர், பிரித் பாராயணம் செய்து ஆசீர்வாதங்களை வழங்கினார்.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.