இராகலை தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரேஸ்ட சட்டத்தரணியும்,பதில் நீதவானுமான எஸ். மோகனராஜன் தொகுத்து எழுதிய மோட்டார் வாகன வழக்கும் அதற்கான தீர்ப்பும் “CASE LOW ON MOTOR TRAFFIC ACT” என்ற சட்டப்புத்தக வெளியிட்டு விழா இராகலை புறநெகும மண்டபத்தில் (20) இடம்பெற்றது.
சிரேஸ்ட சட்டத்தரணியும் பதில் நீதவானுமான பி.பி.கணபதிபிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்த சட்ட புத்தகம் வெளியீட்டு விழாவில் இப் புத்தகம் தொடர்பான அறிமுகத்தினை சட்டத்தரணி பானுசந்தர்,சட்டத்தரணி ரனாஞ்சி வீரதுங்க ஆகியோர் வழங்கியிறுந்தனர்.
அதேநேரத்தில் இந்த சட்ட புத்தகம் தொடர்பாக விமர்சனத்தை சட்டத்தரணி செல்வி சுமித்ரா சிப்பிரமணியம் வழங்கியிருந்தார். இந் நூலின் ஏற்புரையை நூலாசிரியர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.மோகனராஜன் வழங்கியிருந்தார்.
இந்த நிகழ்வில் வரவேற்பு உரையை ஆசிரியர் நிஜாட் வழங்கியதுடன் நன்றி உரையை ஆசிரியர் செல்வகுமார் நிகழ்த்தினார். அத்தோடு நுவரெலியா மற்றும் வலப்பனை சட்டத்தரணிகள் சங்கங்களுக்கும் இராகலை மற்றும் வலப்பனை பொலிஸ் நிலையங்களுக்கு இந்த சட்ட புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நிகழ்வில் மூத்த எழுத்தாளரும்,விமர்சகருமான முன்னால் கல்வி பணிப்பாளர் பி. மரியதாஸ் உட்பட கல்வி அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், சட்டப்படிப்பு மாணவர்கள்,நகர வர்த்தகர்கள்
உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இலங்கையில் மோட்டார் வாகன சட்டம் தொடர்பாக சிங்கள மொழி மூலமான புத்தகங்கள் காணப்படுகிறது தவிர ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் புத்தகங்கள் இல்லை. அத்துடன் வழக்கு தீர்ப்புகளை உள்ளடக்கிய சாராம்சத்தை கொண்ட ஒரு ஆங்கில புத்தகம் இலங்கையின் சட்டத்துறையில் ஒரு மிகப்பெரிய குறைப்பாடாகவும்,இடைவெளியாகவும் காணப்படுகிறது.
ஆகவே இந்த இடைவெளியை பூரணப்படுத்தும் முகமாக இந்த ஒரு புத்தகம் இலங்கையில் முதல் தடவையாக மோட்டார் வாகன சட்டம் தொடர்பாக வழக்கு தீர்ப்புக்கள் உள்ளடக்கிய புத்தகமாக இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதாக நூலாசிரியர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ். மோகனராஜன் தனதுரையில் தெரிவித்தார்.
மேலும் மோட்டார் வாகன வழக்கு மற்றும் தீர்ப்பு தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்ட புத்தகத்தின் நூலாசிரியரான சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.மோகனராஜன் இராகலை சேன் லெணாட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.
இவர் சட்ட பீடத்தில் சட்ட முதுமானி பட்டமும் பெற்றுள்ளார். தொடர்ந்து சட்ட கல்லூரியில் சிறப்பு சித்தியும் பெற்றுள்ள இவர் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாகவும், நுவரெலியா மேல் நீதிமன்றம் உட்பட வலப்பனை மற்றும் ஏனைய நீதிமன்றங்களில் குற்றவியல், குடிவியல், எழுத்தானை வழக்குகலோடு மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கையாலக்கூடிய சட்டத்தரணியுமாவார்.