ஐக்கிய இராச்சியத்தில் (UK) இருந்து உதிரிப் பாகங்கள் என்ற போர்வையில் வாகனங்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு , இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து சொகுசு வாகனங்களை சுங்க திணைக்களம் கைப்பற்றியுள்ளது. கைப்பற்றப்பட்ட வாகனங்களில் BMW, Mercedez, Audi வகை கார்கள் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ளனர்.
ஒருகொடவத்தையில் அமைந்துள்ள கொள்கலன் களஞ்சியசாலையில் இருந்து இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.