இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா இங்கிலாந்தில் சத்திரசிகிச்சை செய்துகொண்டார்.
இங்கிலாந்தின் மத்திய லண்டனில் இருக்கும் கிங் எட்வட் வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த சத்திர சிகிச்சைக்கான முழு செலவையும் இலங்கை கிரிக்கெட் சபை ஏற்றுள்ளது. பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் அன்ட்ரூ வொலஸ் தலைமையிலேயே இந்த சத்திர சிகிச்சை இடம்பெற்றுள்ளது.
‘எதிர்வரும் 14 நாட்களுக்குள் அவர் குணமடைய வேண்டும். என்றாலும் இம்மாதம் 14 ஆம் திகதி அவரை மீண்டும் சோதிக்க வேண்டும்” என்று மருத்துவர் அன்ட்ரூ வொலஸ் கூறினார்.
கடந்த ஆண்டு இந்தியாவின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன்னரே குசல் பெரேராவுக்கு தோள்பட்டை காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆட்டத்தில் அசெளகரியத்தை உணர்ந்தார்.
இந்த உபாதையுடனேயே அவர் கடந்த ஆண்டு லங்கா பிரிமியர் லீக் போட்டியில் ஆடினார். அப்போது அவர் ஒவ்வொரு நாளும் போல் வலி நிவாரணி மற்றும் ஊசிகளை எடுத்துக்கொண்டே போட்டியில் பங்கேற்றார் என்று நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தெரியவருகிறது.