சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இலட்சத்தைக் கடந்தது

0
296

ஐயப்பசுவாமியை தரிசனம் செய்ய உலகமெங்கும் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். மலை எங்கும் சரணகோஷம் எதிரொலிக்கிறது. மண்டல பூஜைக்காலம் தொடங்கியது முதல் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த 12 நாட்களில் மட்டும் 52 கோடி 55 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 5 மடங்கு அதிகமாகும்.

கடந்த 16ஆம் திகதியன்று இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டது. 17ஆம் திகதி முதல் பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர்.

விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் ஒன்றே முக்கால் இலட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். எதிர்வரும் 30ஆம் திகதி வரை தரிசனத்திற்கு 8 இலட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ‘ஒன்லைன்’ மூலம் முன்பதிவு செய்துள்ளனர். உடனடி முன்பதிவையும் சேர்த்தால் 10 இலட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 12 நாட்களில் மட்டும் கோயிலுக்கு 52 கோடி 55 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 9 கோடி 92 இலட்சம் ரூபா மட்டுமே வசூலாகி இருந்தது.

ஐயப்பனை தரிசனம் செய்ய மாதந்தோறும் பக்தர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். கார்த்திகை மாதம் முதல் தை மாத பிறப்பு வரை மண்டல மகரபூஜை காலமாகும். ஆண்டு தோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து தரிசனம் செய்ய மலையேறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here