சப்ரகமுவ மாகாண அரச ஊழியர்களுக்கான தமிழ் மொழி பயிற்சி நெறியின் நிறைவுநாள் நிகழ்வு நேற்று(08) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் குருவிட்ட புஸ்ஸல்ல முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
அரச கரும மொழி திணைக்களமும் சப்ரகமுவ மாகாண சபையும் இணைந்து மேற்படி பயிற்சி நெறியை நடாத்தினர்.
சப்ரகமுவ மாகாண அரச சேவையை சேர்ந்த 148 பேர் இரண்டு பிரிவுகளாக மேற்படி பயிற்சி நெறியில் கலந்து கொண்டனர்.
முதலாவது பிரிவிற்கு 150 மணித்தியாளமும், இரண்டாவது பிரிவிற்கு 200 மணித்தியாலமும் இப்பயிற்சிநெறி நடைபெற்றது.
மேற்படி பயிற்சி நெறியை, ஆசிரியர்களான பெனடிக் ஆசிரிவாதம், பி.பரமசிவம், பி.பழனியான்டி ஆகியோர்களால் நடாத்தப்பட்டது.
மேற்படி நேற்றைய தினம் (8) நடைபெற்ற பயிற்சி நெறியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழியிலும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சப்ரகடுவ மாகாண பிரதான செயலாளர் சுனில் ஜயலத், உதவி பிரதான செயலாளர் சுசிலா ராஜபக்ஷ, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் மஞ்சுளா இதிகாவெல, பிரதி செயலாளர் நிஷந்த சமன் குமார, குருவிட்ட புஸ்ஸல்ல முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.வீ.சமரசிங்க உட்பட அரச சேவையாளர்களும் கலந்து கொண்டனர்.
சிவா ஸ்ரீதரராவ் –