சப்ரகமுவ மாகாண கல்வித்திணைக்களத்திற்கு தங்கப்பதக்கமும் சர்வதேச விருதும்

0
221

ஆசியா பசுபிக் தகவல் தொழிநுட்ப அமைப்பினால் நடாத்தப்பட்ட APICTA  Awards 2022 மற்றும் The OSCAR OF ICT சர்வதேச விருதும் தங்கப் பதக்கம் சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளது.

 சப்ரகமுவ மாகாண கல்வி திணைக்களம் 2017ஆம் ஆண்டு முதல் கல்வித்துறை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியமைக்காக (Education Management Information System) மேற்படி சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்திற்கு சர்வதேச விருதும் தங்கப் பதக்கமும் கிடைத்துள்ளது.

 பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் செரின் உல்லாச விடுதியின் கேட்போர்கூடத்தில் இம் மாதம் 07ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை  இடம்பெற்ற சர்வதேச போட்டி நிகழ்ச்சியின்போதே இவ் விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

 APICTA  Awards  விருது வழங்கிய ஆசியா பசுபிக் தகவல் தொழிநுட்ப அமைப்பில் இலங்கை 21 வருடங்களாக அங்கத்துவம் வகிக்கின்றது.

 சப்ரகமுவ மாகாண கல்வி திணைக்களம் 2017ஆம் ஆண்டு முதல் கல்வித்துறை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிவரும் இத்திட்டத்திற்கு சப்ரகமுவ மாகாண சபை அனுசரணை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 மேற்படி ஆசியா பசுபிக் தகவல் தொழிநுட்ப அமைப்பினால் நடாத்தப்பட்ட APICTA  Awards 2022 மற்றும் The OSCAR OF ICTசர்வதேச விருதும் தங்கப் பதக்கம் வென்ற சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் அன்சாப் தவுஸ், லக்மால் எரந்த மற்றும் ஆசிரியர் அநுராத பதிரன ஆகியோர் திங்கட்க்கிழமை(12) பாகிஸ்தானில் இருந்து இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தபோது அவர்களை சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் மஞ்சுலா இதிகாவெல உட்பட சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றனர்.

சிவா ஶ்ரீ தர ராவ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here