47 ஆவது XLVII தேசிய விளையாட்டு நிகழ்வை முன்னிட்டு சப்ரகமுவ மாகாண விளையாட்டுப்போட்டி நிகழ்வு நேற்று முன்தினம் (17) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் எம்பிலிபிட்டிய மகாவெளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
சப்ரகமுவ மாகாண விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் மாகாண விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, எம்பிலிபிட்டிய நகர சபையின் தலைவர் தினேஷ் மதுசங்க, எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் தலைவர் சுரந்த வீரசிங்க, சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் சுனில் ஜயலத், மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் சாமர பமுனுஆராச்சி, மாகாண சமூகசேவைகள் அமைச்சர் சஞ்ஜீவ கொடல்லவத்த, மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் மஞ்சுலா இதிகாவெல உட்பட பாதுகாப்பு அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.