சமர்வில் தோட்டத்தில் உயிரிழந்த சிறுத்தை புலி: மூவரிடம் வாக்கு மூலம்

0
329

ஹட்டன் டிக்கோயா சமர்வீல் தோட்டப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுத்தை புலி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இன்று  மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாய வனஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பணிப்புரை க்கு அமைய இன்றைய தினம் ஹட்டன் டிக்கோயா வனராஜா சமர்வில் தோட்டப்பகுதிக்கு சந்ரா ஹேரத் தலைமையில் சென்ற குழுவினரினால் சிறுத்தை புலி உயிர்ழந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

நல்லத்தன்னி வனவிலங்கு அதிகாரி , சிறுத்தை புலி மரத்தில் இருந்ததை இனங்கொண்டு 119என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கும் நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கிய இளைஞன் மற்றும் சிறுத்தை புலி எரியிருந்த மரத்தினை வெட்டிவர் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

எஸ் சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here