அக்கரப்பத்தனை ஹோல்புறூக் ரீப்பப்ளிகன் சர்வதேச பாடசாலையில் 2021 ஆண்டு கா.பொ.தா பரீட்சையில் முதல் தடவையாக தோற்றிய 10 மாணவர்கள் நூறு விகிதம் பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு சமூகத்துக்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கான பாராட்டு விழா பாடசாலை முதல்வர் திருமதி ஜெயசத்தியவாணி தலைமையில் லக்சுமிமஹால் போர் கூடத்தில் இன்று காலை 11 மணிக்கு நடை பெற்றது.
பாடசாலைக்கு முன்பாக பிரதம அதிதிகள் பேண்ட் வாத்திய இசையுடன் பிரதான மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
ரீப்பப்ளிகன் சர்வதேச பாடசாலையின் பணிப்பாளர் விஜயகுமார் அக்கரப்பத்தனை பொலீஸ் நிலைய அதிகாரி வைத்திய அதிகாரிகள் கிராம சேவகர் பாடசாலை அதிபர்கள் பிரதேச மக்களின் பலரும் கலந்து கொண்டனர் .
நிகழ்வில் , சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைத்ததோடு மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தி பாடசாலை நிர்வாகத்திற்கும் கௌரவம் வழங்கப்பட்டது.