சார்ஜாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – ஆய்வு கட்டுரைகளுக்கு அழைப்பு

0
423

11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் இடம்பெறவுள்ளது. ”இணைய காலகட்டத்தில் தமிழ் மொழி எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இவ்வாய்வு மாநாடு, ஜூலை மாதமளவில் நடாத்தப்படவுள்ளது. இதனை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து லிங்கன் தொழில் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகம் ஒழுங்குசெய்கின்றது.

11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 136 நாடுகளிலிருந்து 63 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படவுள்ளனர். இதேவேளை இம்மாநாட்டுக்காக சர்வதேச ரீதியில் ஆய்வுக்கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன. கலைப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்ப்புலம், மொழிப்புலம், அறிவியற்புலம் ஆகிய கருத்துத் தளங்களில் இவ்வாய்வுக் கட்டுரைகள் அமைய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரைகள் அனுப்புவதற்கான இறுதித்திகதி 30.11.2022 ஆகும். பெயர், வயது, கல்வித் தகுதி, பணிபுரியும் நிறுவனம், மின்னஞ்சல் முகவரி ஆகிய விபரங்களையும் ஆய்வுக்கட்டுரையுடன் இணைத்து அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. abstract2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆய்வுக்கட்டுரைச் சுருக்கங்களை அனுப்பலாம் என்பது குறிப்பிடத் தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here