பிரித்தானிய மன்னர் 3 ஆம் சார்ள்ஸை தினமும் காலையில் துயிலெழுப்புவதற்காக உத்தியோகபூர்வமாக ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பைப்பர் இசைக்கலைஞரான போல் பர்ன்ஸ் என்பவரே இப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மன்னர் 3 ஆம் சார்ள்ஸின் படுக்கை அறை ஜன்னலுக்கு வெளியிலிருந்து தினமும் காலை 9.00 மணி முதல் 15 நிமிட நேரம் பைப்பர் இசையை போல் பர்ன்ஸ் இசைப்பார்.
இதற்காக, பிரிட்டனில் மன்னர் 3 ஆம் சார்;ள்ஸ் தங்கிருக்கக்கூடிய பங்கிங்காம் அரண்மனை, வின்சர் மாளிகை, பால்மோரல் மாளிகை, ஹொலிரூட் ஹவுஸ் உட்பட அனைத்து இடங்களுக்கும் போல் பார்ன்ஸும் பயணம் செய்வார்.
இவர் முன்னர் 2 ஆம் எலிஸபெத் அரசியை தினமும் துயிலெழுப்பும் பணியை செய்துவந்தார். 2 ஆம் எலிஸபெத் அரசியின் இறுதிக்கிரியையிலும் அவர் பைப்பர் கீதத்தை இசைத்தமை குறிப்பிடத்தக்கது.
போல் பர்ன்ஸ்
பிரித்தானிய அரசர் அல்லது அரசியை தினமும் துயில் எழுப்புவதற்கான உத்தியோகபூர்வ ஊழியர் ஒருவர் நியமிக்கப்படுவது பாரம்பரியமாகவுள்ளது.
விக்டோரியா அரசியின் ஆட்சிக்காலத்தில் 1843 ஆம் ஆண்டு இவ்வழக்கம் ஆரம்பமாகியது.
போல் பர்ன்ஸ்
2 ஆம் எலிஸபெத்தின் 70 வருட ஆட்சிக்காலத்தில் 17 ஆவது பிரத்தியேக பைப்பர் க லைஞராக பைப் மேஜர் போல் பர்ன்ஸ் (Paul Burns) 2021 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது மன்னர் 3 ஆம் சார்ள்ஸை துயிலெழுப்பும் பணிக்கும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.