சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி இளைஞர் ஒருவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தீயிட்டு கொளுத்தி கொலை செய்துள்ளனர்.
இந்தியாவின் ஜார்க்கண்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கும்லா பகுதியைச் சேர்ந்த சிறுமியும், அவரது தாயும் அருகே உள்ள கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப இருந்தனர்.
அப்போது, பேருந்து கிடைக்காததால், அவ்வழியே பைக்கில் சென்ற கும்லா பகுதியைச் சேர்ந்த இருவரிடம் சிறுமியை ஊரில் விடுமாறு அவரது தாய் கூறியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, பைக்கில் ஏறிய சிறுமியை இளைஞர்கள் வனப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனை பெற்றோரிடம் சிறுமி கூறிய நிலையில், ஆத்திரமடைந்த அவர்கள், உறவினர்களுடன் சேர்ந்து இளைஞர்களை தாக்கி, அவர்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகவும் பொலிஸார் கூறினர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.