சிறுவர்களுக்கிடையே வேகமாக பரவும் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் தற்போது அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பெற்றோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் சிறார்களுக்கு, காய்ச்சல், தலைவலி, தடிமன், தும்மல், உடல் வலி, வாந்தி போன்ற நோய் அறிகுறிகள் காணப்படும் எனவும் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சிறார்களுக்கு நுரையீரலுடன் தொடர்புடைய நோய் நிலைமைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.