சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் உள்ளதாக, பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளி விபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“இந்தக் குழுவில், சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 66 பேரும், விளக்கமறியலில் உள்ள 265 பேரும் அடங்குகிறார்கள். கடந்த ஆண்டு வரை சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை, 1,85,006 ஆகும். அவர்களில் 14,952 பேர் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களாவர்.
மேலும், மீதமுள்ள கைதிகளில் சராசரியாக 44,614 பேர், சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களாகும். அத்துடன், 64,684 பேர், 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களாகும்.
இதேவேளை, 5 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் 34,673 பேரும், 1-5 தரத்தில் தேர்ச்சி பெற்றவர் 20,188 பேரும் இருக்கின்றனர். இது தவிர, இந்தக் குழுவில் பாடசாலைக்குச் செல்லாத 5,370 பேர் உள்ளனர்” என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )