ஹேவாஹேட்ட நூல்கந்தூர ஆதவன் வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை கற்று தொடர்ந்து தெல்தோட்டை மலைமகள் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவி கவிசாலனி சிலம்பாட்ட போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டிபத்தில் நடைப்பெற்ற சிலம்பாட்ட போட்டியில் பல்வேறு பிரதேசங்களில் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றி இருந்தனர் .
சிலம்பாட்ட பயிற்றுவிப்பாளர் வி.சிவராஜா இலங்கை சிலம்பாட்ட சம்மேளன தலைவர் திருச்செல்வம் செயலளாலர், தினேஷ்குமார் தலைமையில் இந்த போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் நூல்கந்தூர பிரதேசத்தை சேர்ந்த தரம் 09 இல் கல்வி கற்கும் கவிசாலினி இரண்டாம் இடத்தை பெற்று வெற்றி பெற்று அடுத்த போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவிக்கு ஆரம்ப கல்வியை கற்ற நுல்கந்தூர ஆதவன் வித்தியாலயத்தின் அதிபர். மகேந்திரன் தலைமையில் வரவேற்பு நிகழ்வு நடைப்பெற்றது.
இதில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது .
கம்பளை நிருபர்