எரிபொருள் தட்டுப்பாட்டினால் ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சினை காரணமாக கடந்த சில வாரங்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள் முன்னர் அறிவித்த வகையில், இன்று திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் காலப்பகுதி தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும். முதலாம் தவணை பரீட்சை இடம்பெற மாட்டாது .
இதற்கமைய, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறும். புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என தெரிவித்துள்ள கல்வியமைச்சு தென்மாகாண சபையின் கீழுள்ள பாடாசாலைகள் 5 நாட்களும் நடைபெற உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.