நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை சீனாவுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு தங்கியிருக்கும் போது சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யி ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிய ருகிறது.
பெய்ஜிங்கில் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ள அமைச்சர் வாங் யீ விடுத்த அழைப்பின் பேரில் ராஜபக்சவின் வருகை அமைந்ததாக அறியகூடியதாக உள்ளது.
நினைவு நிகழ்வுகளில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிரதமர் லீ கியாங், வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் இதர முன்னணி சிபிசி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிங்கப்பூர் வழியாக பெய்ஜிங் சென்ற ஜனாதிபதி, ஜூலை 1ஆம் திகதி நாடு திரும்புகிறார்.