நுவரெலியா மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மூன்று இலட்சம் ரூபா செலவில் நிவாரண உதவிகளை இன்று காலை வழங்கிவைத்தது.
அந்தவகையில் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் தமது வீடுகள் மற்றும் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கான ஆடைகள், படுக்கை விரிப்பு, தலையணைகள் மற்றும் குளிர் தாங்கும் உடுதுணிகள் என பல பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் வழிகாட்டலில் இப்பொருட்கள் நுவரெலியா மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சென்றடையும் வகையில், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இயங்கும் இடர் முகாமைத்துவ மத்திய நிவாரண பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.