சீ.வி.வேலுப்பிள்ளையின் கல்லறையில் மலர் தூவி தேர்தல் பிரசாத்தை ஆரம்பித்தார் -,திலகர்

0
145

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நுவரெலியா மாவட்டம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினால் அனுமதி அளிக்கப்பட்ட வகையில் தேர்தல் காரியாலயம் ஒன்று அமைத்துக் கொள்வது தொடர்பாக பிரச்சனை எதிர் கொள்வதாக இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஒரு வாக்காளருக்கு 20 ரூபாய் மாத்திரமே செலவழிக்க முடியும் என சட்டம் இருக்கின்ற நிலையில் தனக்கு அதிக செலவில் காரியாலயங்களை அமைக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அதேபோல தான் பிறந்து வாழ்ந்த மடக்கும்புர வீட்டு லயன் அறையில் தனது தேர்தல் காரியாலயத்தை அமைப்பதற்கு விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தகைய ஒரு தேர்தல் காரியாலய தேர்தல் காரியாலத்திற்காக பயன்படுத்தக்கூடிய அந்த கட்டிடத்தின் அனுமதியை கட்டிட உரிமையாளர் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் குறித்த கட்டிடம் 100 சதுர அடி பரப்பளவைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் எட்டு அடிக்கு உயரமானதாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சுற்று நிறுவனம் ஆறிலே சுயாதீன தேர்தல்கள் ஆணை குழுவினால் கூறப்பட்டுள்ளது .

ஆனால் குறித்த லயன் அரையின் உயரம் ஆறடியை விட குறைவாக இருப்பதாகவும் பரப்பளவு 100 சதுர அடி விட குறைவாக இருப்பதாகவும் தெரிவித்த வேட்பாளர் தனது ஆச்சியான கருப்பன் தனபதி வீட்டின் உரிமையாளர் இந்த காரியாலனத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கிய போதும் அந்த வீடு அவருக்கு உரிமையானது என சொல்வதற்கு அவரிடம் எந்த பத்திரமும் இல்லை என்றும் இந்த கட்டிடம் அரசுக்கோ வேறு நிறுவனத்திற்கோ சொந்தமில்லை என்றும் தான் உறுதி செய்ய வேண்டிய நிலையில் தன்னால் அந்த விண்ணப்பத்தில் அதனை உறுதி செய்ய முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

எனவே சுயாதீன தேர்தல் ஆணையாளர் குழுவுக்கும் கண்காணிப்பு குழுவின் இருக்கும் தேர்தல்கள் தொடர்பான சர்வதேச நிறுவனங்களுக்கும் இந்த தகவலை தெரிவிப்பதன் ஊடாக தனக்கு தேர்தல் காரியாலயம் ஒன்று அமைப்பதற்கு இந்த லயன் அறையில் அமைப்பதற்கு விசேட அனுமதி பெற்று தருமாறு கேட்டுக் கொண்டார் இத்தகைய ஒரு வாழ்க்கைச் சூழலில் தான் மூன்று லட்சம் குடும்பங்களைக் கொண்ட இலங்கை மலையகப் பெருந்தோட்ட மக்கள் வாழ்கிறார்கள் இந்த வாழ்க்கை சூழலில் வாழ்கின்ற மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்பது தொடர்பாக பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் உள்ளிட்ட கொள்கை வகுப்பாளர்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு இந்த தகவலை எடுத்துச் செல்வதாகவும் கூறி தான் வெல்வதற்காக இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் இத்தகைய தகவல்களை ஆதாரங்களுடன் சொல்வதற்காகவே போட்டியிடுவதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதேவேளை இன்றைய தினம் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜா வட்டகொட பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.வீ.வேலுப்பிள்ளையின் கல்லறைக்கு மலர் தூவி தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here