சுகயீன விடுமுறை போராட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஈடுபட்டு வரும் கிராம உத்தியோகஸ்தர்கள் இன்று சர்வமத ஆசீர்வாத பூஜைகளில் ஈடுபட்டதுடன் சர்வமத தலைவர்களிடத்தில் தமது கோரிக்கைகள் அடங்கிய மஜரையும் கையளித்து தமது கோரிக்கைகள் தொடர்பிலும் விளக்கமளித்தனர்.
இலங்கை கிராம உத்தியோகஸ்தர்கள் சங்கத்தின் நோர்வூட் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலங்கை கிராம சேவகர்கள் சங்கத்தின் தலைவர் நிசாந்த குமாரகே தலைமையில் அட்டன் நகரிலுள்ள இந்து ஆலயம், பௌத்த விகாரை மற்றும் பள்ளிவாசலிலும் ஆசீர்வாத பூஜையில் ஈடுபட்டனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிசாந்த குமாகே கிராம சேவகர்களாகிய நாங்கள் எந் நேரமும் மக்களுக்காக சேவையாற்றி வருகிறோம் ஆனால் நீண்டகாலமாக தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் எங்களுடைய நியாயமான கோரிக்கையை நிறைவேற்றத்தவறுகின்றன.
இந் நிலையில் நாடளாவிய ரீதியில் 41,15,16 மூன்று நாட்களாக சுகயீன விடுமுறை போராட்டத்தினை நாடாத்தி வருகின்றோம்.
கிராம சேவகர்களுக்கு வரையறையின்றி அனைத்து சேவைகளிலும் ஈடுபடுத்துகின்றமையினால் அசௌகரியத்திற்கு உள்ளாகிறோம் எனவே
கிராம சேவகர்களுக்கான சேவை பிரமானம் வெளியிடுமாறு தொடர்ந்து அரசிடம் நீண்டகாலமாக கோரிக்கை முன் வைக்கின்றோம்.
அதோபோல வாழ்க்கை செலவிற்கேற்ப மாதாந்த சேவை பிரயாண கொடுப்பனவு, வருடாந்தம் வழங்கும் ஆடைக்கான கொடுப்பனவு, மேலதிக சேவைக்கொடுப்பனவுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்
எனினும் உரிய தீர்வு கிடைக்காத நிலையிலே நாங்கள் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம்.
அதோபோல இன்றைய தினம் சர்வமத ஆசீர்வாத வழிபாட்டில் ஈடுபட்டதுடன் சர்வமத தலைவர்களுக்கும் எமது கோரிக்கையில் நியாயத்தன்மையை விளக்கமளித்து மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளோம் .
நாட்டின் ஜனாதிபதி மற்றும் துறைசார் அமைச்சு எமது கோரிக்கையினை ஏற்று உரிய தீர்வினை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
கடந்த மூன்று நாட்களாக தொழிற்சங்க போராட்டத்தில் கிராம உத்தியோகஸ்த்தர்கள் ஈடுபட்டுள்ளமையினால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எம்.கிருஸ்ணா