இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள ரஷ்ய பிரஜை ஒருவர், கொள்கலனில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்ததால் ஹப்புத்தளை எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், குறித்த சுற்றுலா பயணி எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு அங்கு கூடியிருந்தவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால் எரிபொருள் விநியோகம் சிறிது நேரம் தடைபட்டது. ஹப்புத்தளை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு ஒரு வாரத்திற்கு பின்னர் இன்று எரிபொருள்
விநியோகிக்கப்பட்டதால் காலை முதல் வாகனங்கள் நீண்ட வரிசையில் தரித்து
வைக்கப்பட்டிருந்தமை காரணமாக கொழும்பு – ஹப்புத்தளை பிரதான வீதியின்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரஷ்ய உல்லாச பிரயாணி எரிபொருளைப்பெற கொள்கலனுடன் செல்வதையும், அதற்கு கியூவில் நின்ற மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதையும் படங்களில் காணலாம்.
எம். செல்வராஜா