செங்கோலை வடிவமைத்த சிற்பக்கலைஞர் காலமானார்

0
662

ஏழு தசாப்த காலத்துக்கும் அதிக காலம் தூரிகையால் கலை வளர்த்தவரும் செங்கோலை வடிவமைத்தவருமான சிற்பக்கலைஞர் கலாசூரி கலாநிதி விக்கிரமாரச்சிகே ஆரியசேன தனது 92 ஆவது வயதில் காலமானார்.

அரச கலை நிறுவனங்களில் சித்திரம் மற்றும் சிற்பத் துறையில் கற்றதோடு உலக பிரசித்தி பெற்ற சித்திரக்கலை ஆசிரியர்களிடமும் பயின்று  இத்துறையில் கலைஞராக மிக சிறப்பாக ஆக்கங்கள் பலவற்றை உலகுக்கு அளித்துள்ளார். குடியரசு இலச்சினை, செங்கோல், இராணுவ மற்றும் கடற்படை இலச்சினை அவரின் ஆக்கங்களில் சிலவாகும். மேலும் அவர் இரண்டு தடவைகள் 1954 மற்றும் 1956இல் சிறந்த கலை படைப்புக்கான ஆளுநர் விருதையும் வென்றுள்ளார் .

தற்போதுள்ள இலங்கை சாரணர் இலச்சினையையும் உருவாக்கியவரும் அவரே. மேலும் சாரணர் இயக்கத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட சாரணர் முத்திரை உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான நினைவு முத்திரைகளையும் உருவாக்கியவரென்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here