பிரித்தானிய அரசி 2 ஆம் எலிஸபெத்தின் மறைவையொட்டி, செப்டெம்பர் 19 ஆம் திகதி திங்கட்கிழமை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கான பணிப்புரைகளை பொதுநிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ளார் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை இலங்கையில் அரச நிறுவனங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.