செல்பி எடுக்க முயற்சித்த 24 வயதுடைய இளைஞரொருவர் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஹப்புதலை – ஹல்துமுல்ல பகுதியிலுள்ள நீர்வீழ்ச்சி ஒன்றிற்கு அருகில் ஷெல்ஃபி புகைப்படம் எடுக்க முயற்சித்த இளைஞரே நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
நீர்வீழ்ச்சிக்கு இரண்டு நண்பர் சென்ற நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. வெலமிடிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.