முறையாக வடிகாலமைப்புத் திட்டம், பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் ஹட்டன் நகரில் உள்ள பிரதான வீதியில் மழை காலங்களில் இவ்வாறு காட்சி தருகிறது. இவ்வாறான ஒரு நிலையில் தான் சில காலங்களுக்கு முன் சிறுமி ஒருவர் விபத்திற்குள்ளாகி மரணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஹட்டன் நகர சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் கழிவு நீர் வடிகால் வழியாக பிரதான வீதியில் உள்ள மணிக் கூட்டு சந்தியில் இருந்து டிக்கோயா வீதியில் டெலிகொம், எம்.ஆர்.டவுன், பிரதான பேருந்துகள் தரிப்பிடம் ஆகிய பகுதிகளில் இந்த கழிவுநீர் வழிந்தோடும்.
இதனை கட்டுபடுத்த கழிவு நீர் செல்லும் வடிகால்கள் ஆழப்படுத்தும் பணியை ஹட்டன் நகர சபை முன்னெடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் நகர வர்த்தகர்கள் பாடசாலை மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.