அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் டெலவார் மாநிலத்தில் இருக்கும் தனது கடற்கரை வீட்டுக்கு அருகில் சைக்கிளில் இருந்து விழுந்துள்ளார்.
எனினும் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. கடந்த சனிக்கிழமை சைக்கிளில் சென்றுகொண்டிருந்த 79 வயதான பைடன், அதில் இருந்து விழுந்த உடனே எழுந்து நின்றதோடு, தமக்கு எதுவும் ஏற்படவில்லை என்று கூறினார்.
அவருடைய உடல்நலம் குறித்த தகவல்கள் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.