‘சொன்னதை செய்து காட்டிய ஜீவன் ‘

0
160
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில்  (12) வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்பு விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அன்று 1000 ரூபாய் சம்பளம் பெற்றுத்தருவதாக தெரிவித்தேன் அதனை பெற்றுக்கொடுத்தேன். அதேபோல் 1700 ரூபாய் சம்பளம் பெற்றுத்தருவதாக தெரிவித்தேன் இதனையும் பெற்றுக்கொகொடுத்துவிட்டேன்.
ஆகவேதான் மக்களிடம் வழங்கப்படும் வாக்குறிதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றும். இந்த 1700 ரூபாய் சம்பள வெற்றியினை மிகப்பெறிய வெற்றியாக கருதுவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, சம்பள விடயம் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட தவறுகளை திருத்தி அமைத்து 1700 ரூபாய் சம்பளம் உயர்வை பெற்றுத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு, அமைச்சரும்  இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
எஸ். சதீஸ் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here