ச.தொ.ச.வின் களஞ்சியசாலைகளில் 65 கோடி ரூபா (650 மில்லியன்) பெறுமதியான காலாவதியான உணவுப் பொருட்கள் உட்பட பெருந்தொகையான நுகர்வுப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள வார ஏடு ஒன்றின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ச.தொ.ச.வின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்த்தனவினால் நடத்தப்பட்ட சிறப்பு விசாரணையின் போது இது தெரியவந்துள்ளது. இதில், காலாவதியான பொருட்கள், மூன்று ஆண்டுகளாக வெவ்வேறு தொழிலதிபர்களிடம் இருந்து வாங்கி விற்க முடியாமல் உள்ளன.
பால் பவுடர், பாண் மா, பிஸ்கட், சோயா மீற், டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் என பல அத்தியாவசிய உணவுகள் காலாவதியாகிவிட்டதாகவும் இதனால் ச.தொ.ச.வுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய தலைவர் நியமிக்கப்பட்ட பின்னர், 130 இலட்சம் (13 மில்லியன்) பெறுமதியான இந்த பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன, அவர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால், 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு வாங்கிய காலாவதியான பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு திருப்பி அனுப்பப்படாமல் அனைத்தும் பழுதடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.